பைனாப்பிள் கேக் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 150 கிராம்

முட்டை - 3

வெண்ணெய் - 120 கிராம்

பொடித்த சர்க்கரை - 140 கிராம்

பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

நன்கு பதப்படுத்திய அன்னாசிப்பழ வில்லைகள் - நான்கு

பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள்

மஞ்சள் கலர் - சிறிது

செர்ரி பழங்கள் - 6

செய்முறை:

வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.

முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்தாற்போல் அடிக்கவும்.

பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேக்கிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.

10 அங்குல கேக் தட்டில் 20 கிராம் வெண்ணெயை சமமாகத் தடவிக் கொள்ளவும்.

நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லச் சர்க்கரையை மேலாக நன்கு சமமாகத் தூவி விடவும்.

பைனாப்பிள் வில்லைகளை கேக் தட்டின் அடிப்பாகத்தில் அழகாக வைக்கவும். நடுவில் செர்ரி பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.

அன்னாசி வில்லைகள் மேல் மேலே செய்த கலவையை மெதுவாகப் போடவும். பைனாப்பிள் வில்லைகள் நகராமல் இருக்க வேண்டும்.

375 டிகிரி F சூட்டில் சுமார் 35 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.

கேக் சிறிது ஆறிய பிறகு ஒரு தட்டில் ஜாக்கிரதையாக திருப்ப வேண்டும்.

தட்டில் கீழே உள்ள அன்னாசிப்பழ வில்லைகள், செர்ரி பழங்கள் கேக்கின் மேல் அலங்காரம் செய்தது போல் இருக்கும்.

வெல்லச் சர்க்கரை சூட்டில் கரைந்து அன்னாசிப்பழ வில்லைகளின் மேல் ஒரு பளபளப்பை கொடுக்கும்.

குறிப்புகள்: