பைனாப்பிள் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம் சர்க்கரை - 100 கிராம் வெண்ணெய் - 100 கிராம் முட்டை - ஒன்று உப்பு - ஒரு கிள்ளு பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பால் - 100 மிலி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை - 50 கிராம் பைனாப்பிள் - பாதி ப்ளு பெரி - சிறிது

செய்முறை:

பைனாப்பிளை வட்டமாக நறுக்கிக் கொண்டு நடுவில் இருக்கும் தண்டினை அகற்றி விடவும். வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும். பேக்கிங் பவுடரையும்

மைதாவையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

80 கிராம் வெண்ணெயை சர்க்கரையுடன் சேர்த்து கலக்கி

அதில் முட்டையை சேர்த்து அடித்து வெனிலா எசன்ஸை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்தில் அடித்துக் கொள்ளவும்.

பாலையும்

மைதா கலவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.

அவனை 350க்கு முற்சூடு செய்து கேக் பேனில் 20 கிராம் வெண்ணெயை போட்டு அவனில் சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும். வெண்ணெய் உருகியவுடன் அதில் நாட்டு சர்க்கரையை சேர்த்து குழையும் படி செய்து பரப்பிக் கொள்ளவும்.

பின் வெட்டி வைத்த பழங்களை அடுக்கி

இடையிடையே ப்ளு பெரி பழம் அல்லது விரும்பிய பழத்தை வைக்கவும்.

கேக் கலவையை அதில் சீராக ஊற்றவும்.

பின் அவனில் பேனை வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும்.

கேக் நன்கு பொன்னிறமாக ஆனதும்

வெந்ததை உறுதி செய்து அவனை அணைத்து ஒரு பத்து நிமிடம் அவன் கதவை திறந்து வைத்து குளிர் படுத்தவும். நன்கு ஆறியதும்

பக்குவமாக கேக் பேனை தலைகீழாக கவிழ்க்கவும்.

பைனாப்பிள் வாசனையுடன்

சுவையான பைனாப்பிள் அப் சைட் டவுன் கேக் ரெடி.

குறிப்புகள்: