பேரீச்சம் பழ ஜாம்
0
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் - கால் கிலோ தக்காளி பழம் - கால் கிலோ சர்க்கரை - 2 கப் ஏலக்காய் - 10 முந்திரி - 10 கிராம் கேசரி பவுடர் - சிறிது
செய்முறை:
பேரீச்சம் பழம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் ஊற்றி
கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
அத்துடன் நறுக்கிய பேரீச்சம் பழம் மற்றும் தக்காளியைப் போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு கேசரி பவுடர்
ஏலக்காய் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு
வறுத்த முந்திரியைச் சேர்த்து இறக்கவும்.
சுவையான பேரீச்சம் பழ ஜாம் தயார்.