பேரீச்சம்பழ கேக் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் - 800 கிராம்

ரவை - 500 கிராம்

பட்டர் - 500 கிராம்

சீனி - 500 கிராம்

முட்டை - 10 கிராம்

பிளம்ஸ் - 300 கிராம்

வெனிலா - விருப்பத்திற்கு ஏற்ப

தேயிலை - 50 கிராம்

பேக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் பேரீச்சம்பழத்தின் விதை நீக்கி சிறுசிறு துண்டங்களாக வெட்ட வேண்டும்

பின்பு அதனை பெரிய பாத்திரத்தில் போட்டு தேயிலையை வெந்நீரில் ஊற வைத்து அந்த நீரினை எடுத்து வடித்து பேரீச்சம் பழம் உள்ள பாத்திரத்தினுள் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும் (பேரீச்சம் பழம் தேயிலை நீரில் மூழ்கி இருக்க வேண்டும். )

அடுத்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பட்டர், சீனி, முட்டை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக அடிக்க வேண்டும்.

பிறகு அத்துடன் பேரீச்சம் பழத்தை போட்டு நன்றாக அடிக்கவும்.

கடைசியாக பிளம்ஸ், ரவை, பேக்கிங் பவுடர், வெனிலா எல்லாவற்றையும் போட்டு 3 சுற்று சுற்றி விடவும்.

அளவான கேக் தட்டில் பட்டர் தடவி 350 டிகிரியில் 30 அல்லது 40 நிமிடங்கள் (உங்கள் ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது.) பேக் செய்யவும்.

குறிப்புகள்:

தேயிலை நல்ல நிறமாக இருக்க வேண்டும். அப்போது தான் கேக் நல்ல கோக்கோ நிறமாகவும் அழகாகவும் இருக்கும்.