பேரீச்சம்பழ கேக் (1)
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 1 lb
கட்டிப்பால் (கன்டென்ஸ்ட் மில்க்) - 1 tin
ரவை - 1/4கப்
மைதா மா - 1/2 lb
சீனி - 3 மேசைக்கரண்டி
பட்டர் - 1/2 lb
பால்/தண்ணீர் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
கஜு(முந்திரி) - சிறிது
ரெய்சின் - சிறிது
செய்முறை:
பேக்கிங் பானிற்கு பட்டர் தடவி வைக்கவும்.
அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும்.
பேரீச்சம் பழத்தை விதை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அப்பாச்சோடா சேர்த்து 1/2 கப் தண்ணீரில் ஊற விடவும்.
மா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து அரிக்கவும்
சீனி, பட்டர், கட்டிப்பால், மீதி தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் இந்த கலவையை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுள் மாக்கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்).
பின்னர் ஊறவைத்த பேரீச்சம் பழம், கஜு, ரெய்சின் சேர்த்து கலந்து பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
பின்னர் இதை 350 Fஇல் 35 - 45 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
சுவையான பேரீச்சம்பழ கேக் தயார். இதனை ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.