பேரீச்சம்பழம் கேக்
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் - ஒரு கப்(பொடியாக நறுக்கியது)
மைதா - இரண்டரை கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
வெண்ணெய் - 1,1/2 கப்
கண்டன்ஸ்டு மில்க் - 1/2 லிட்டர்
பால் - 1,1/2 கப்
பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பேரீச்சம் பழத்துடன் 3 தேக்கரண்டி மைதா சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரை (electric beater) கொண்டு நன்கு கலக்கவும்.
அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், பால், மைதா, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
பேரீச்சம் பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ட்ரேயில் வெண்ணெய் தடவி, மைதா லேசாக தூவி கலந்தவற்றை ஊற்றி அவனில் 180 டிகிரில் பேக் செய்யவும்.
குறிப்புகள்:
கடாயிலும் செய்யலாம், மைக்ரோ அவனிலும் செய்யலாம். பாலை சுண்ட காய்ச்சினால் அது கன்டன்ஸ்டு மில்க்.