பூஸ்ட் கேக்
0
தேவையான பொருட்கள்:
பூஸ்ட் - கால் கப் மைதா மாவு - ஒன்றரை கப் சீனி - ஒன்றரை கப் முட்டை - 3 வெண்ணெய் - 100 கிராம் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி க்ரீம் (அ) பால் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். அவனை 180°c ல் முற்சூடு செய்யவும்.
வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
வெண்ணெய் முட்டையுடன் சீனி
உப்பு
பேக்கிங் பவுடர்
பூஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதில் கிரீம் சேர்க்கவும். பின்பு அதில் மாவு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி
கலவையை ஊற்றி அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும். கேக் தயாரானதும் உருக்கிய சாக்லேட்டை பரவலாக தடவி விரும்பியவாறு அலங்கரிக்கவும்.
சுவையான பூஸ்ட் கேக் ரெடி.