பீட்ரூட் ஜாம் (1)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1/2 கி.கி
நெய் - 2 ஸ்பூன்
சீனி - 1/4 கி.கி
ஏலக்காய் - 2
செய்முறை:
பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் ஸ்டீமர் பாத்திரத்தில் நெய் மற்றும் துருவிய பீட்ரூட்டை நன்றாக கலந்து மைக்ரோவேவ் ஹையில் 4 நிமிடம் வைக்கவும்.
கலவையை கலந்து விட்டு மீண்டும் 6 நிமிடம் வைக்கவும்.
கலவை ஆறியவுடன் மிக்ஸியில் சீனி, ஏல விதையுடன் மைய அரைக்கவும்.
அரைத்தவற்றை மீண்டும் மைக்ரோவேவ் ஹையில் நேரடியாக மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஜாம் பதம் வரும் வரை வைக்கவும் (8-12 min), இடையே 2 முறை கலந்து விடவும்.