பீட்ரூட் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 100 கிராம் சீனி - 100 கிராம் தேன் - ஒரு மேசைக்கரண்டி ஏலக்காய் - 2 முந்திரி - 8 நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல் சீவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின பீட்ரூட் துண்டுகளை போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்ததும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைய விடவும். சீனி கரைந்ததும் அரைத்த பீட்ரூட் கலவையை ஊற்றி தீயை மிதமாக வைத்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து திறந்து மேலே ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கிளறி விடவும்.

அதன் பிறகு இந்த பீட்ரூட் கலவையில் வறுத்த முந்திரி

திராட்சையை சேர்க்கவும்.

அதன் பிறகு 5 நிமிடம் கழித்து பொடி செய்த ஏலக்காயினை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இறுதியாக அதில் தேனை ஊற்றி கிளறி விடவும்.

சுவையான பீட்ரூட் ஜாம் ரெடி.

இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் அவர்கள். சிறு வயதிலிருந்தே சமையலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்

பழங்கால சமையல்

இக்கால நவீன சமையல் என்று அனைத்திலும் திறன் படைத்தவர். வகை வகையான உணவுகளை வித்தியாசமாக மட்டுமல்லாது

சுவைப்பட தயாரிக்கக்கூடியவர்.

குறிப்புகள்: