பிளம் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 400 கிராம்

எண்ணெய் - கால் கிலோ

சர்க்கரை - 350 கிராம்

பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

முட்டை - 6

செர்ரி - தேவையான அளவு

டியூட்டி ப்ரூட்டி - தேவையான அளவு

ஏலப்பொடி - கால் தேக்கரண்டி

ஜாதிக்காய் பொடி - கால் தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

ப்ளாக்ஜாக் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

முட்டை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து வெண்ணெய்யுடன் கலக்கவும்.

மைதா மாவினை பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலித்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் வெனிலா எசன்ஸ், ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி, ப்ளாக்ஜாக் ஆகியவற்றைச் சேர்த்து முட்டை, வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

செர்ரி, ட்யூட்டி ப்ரூட்டி பழங்களில் சிறிது போட்டு கலக்கி ஒரு கேக் பாத்திரத்தில் ட்ரேஸ் பேப்பரைப் போட்டு கேக் மாவை முக்கால் பாத்திரம் இருக்கும் வரை ஊற்றவும்.

கேக் மாவினை கலந்தவுடனே பாத்திரத்தில் ஊற்றி விடவும். இல்லையெனில் பழங்கள் அடியில் தங்கி விடும்.

பிறகு அதனை ஓவனில் 325 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் வைத்து சுமார் ஒரு மணி நேரம் வேகவிடவும்.

பிறகு எடுத்து சிறிது நேரம் ஆற வைத்து ஒரு தட்டில் கவிழ்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: