பிறந்தநாள் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சதுர வடிவ கேக் பட்டர் க்ரீம் ஐஸிங் - 3 கப் சாக்லேட் சிப்ஸ் - ஒன்றரை மேசைக்கரண்டி வெந்நீர் - சிறிது ரிப்பன் ஃபாண்டன்ட் - 2 கைப்பிடி அளவு பைப்பிங் பாக் ஸ்டார் நொஸில் (No. 27) பாலட் நைஃப் டூத் பிக் பேப்பர் டவல்

செய்முறை:

கேக்கை ஃபோர்டில் வைத்து சுற்றிலும் ஐஸிங் பூசிக் கொள்ளவும். (நிறத்திற்காக ஐஸிங்குக்கு சிறிது சாக்லேட் கலந்திருக்கிறேன்). மீதி ஐஸிங்கில் அரைக் கப் அளவு தனியாக எடுத்து வைக்கவும்.

சாக்லேட் சிப்ஸை 30 நொடிகளுக்கு சூடாக்கி (ப்ளாஸ்டிக் பாத்திரம் பயன்படுத்த வேண்டாம்) ஐஸிங்கோடு கலந்து குழைக்கவும். முழுவதாகக் கலக்கத் தேவையில்லை. இந்த ஐஸிங் கலவையைக் கொண்டு கேக் முழுவதையும் ஐஸ் செய்து கொள்ளவும். பாலட் நைஃபால் ஐஸிங்கைத் தேய்த்து சீராக்கவும். கேக் போர்டைச் சுத்தம் செய்துவிட்டு ரிப்பனை கேக்கின் கீழ் ஓரம் சுற்றி ஒட்டிவிடவும். ரிப்பன் ஒட்ட ஆரம்பிக்கும் இடத்திலும் முடிவிடத்திலும் சிறிது ஐஸிங் தடவி ஒட்டவும்.

தனியாக எடுத்து வைத்த ஐஸிங்கைக் கொண்டு மேல் விளிம்புகளிலும்

ஓரங்களிலும் ஸ்டார் நொஸில் (No. 27) கொண்டு பைப் செய்து கொள்ளவும்.

ஃபாண்டன்டில் சிறிதளவு எடுத்து உருட்டி

ஸ்க்ரூ ட்ரைவர் கைப்பிடி போலவும்

தண்டு போலவும் தனித்தனியாக செய்து எடுக்கவும்.

பிறகு கைப்பிடியையும்

தண்டையும் இணைத்து ஒட்டிக் கொள்ளவும். (இரண்டும் பொருந்தும் இடத்தில் சிறிது ஈரம் தொட்டு ஒட்டினால் ஒட்டிக் கொள்ளும்).

ஸ்க்ரூவின் தலைகளுக்கு மூன்று சிறு துண்டுகளை வட்டமாக உருட்டி

தட்டையாக்கி விட்டு

நடுவே கத்தியால் அழுத்திவிடவும்.

மேலும் சிறிது ஃபாண்டன்ட் எடுத்து உருட்டி

தட்டையாக்கி

பாலட் நைஃபால் வாளின் தகடு போல வடிவமைத்துக் கொள்ளவும். பற்களை வெட்டி சீராக்கிவிடவும்.

வாளுக்குப் பொருத்தமான அளவில் பிடியையும் வடிவமைத்து எடுக்கவும்.

ஈரம் தொட்டு வாளுடன் கைப்பிடியை இணைத்து ஒட்டிக் காயவிடவும்.

சிறிது ஃபாண்டன்டை உருட்டி சுத்தியலின் தலை போல செய்து

முன்பக்கம் தட்டையாக்கி வளைத்துக் கொண்டு கெவர் போல வெட்டிப் பிரிக்கவும்.

அதற்கு ஏற்ற அளவில் தண்டும் கைப்பிடியும் செய்து கொள்ளவும்.

சிறிது நீர் தொட்டு மூன்று துண்டுகளையும் ஒட்டிக் காயவிடவும். விரும்பினால் டூத் பிக் கொண்டும் இணைக்கலாம்.

இரண்டு பக்கமும் கூராக வருவது போல சிறியதும் பெரியதுமாக சில துண்டுகள் உருட்டி எடுக்கவும்.

அவற்றைப் பாதியாக நறுக்கிக் கொண்டு ஒவ்வொரு துண்டுக்கும் ஏற்ற அளவில் தலைகளைச் செய்து ஒட்டிக் கொண்டால் ஆணிகள் கிடைக்கும்.

நீளமாக உருட்டியதை U வடிவத்தில் வளைத்தால் அள்ளுகள் கிடைக்கும்.

கேக்கில் மேல் பரவலாக அனைத்தையும் வைத்து அலங்கரிக்கவும். தேவையானால் சிறியதும்

பெரியதுமாக ஸ்க்ரூ தலைகள் செய்து வெற்றிடங்களை நிரப்பலாம்.

குறிப்புகள்: