பான் கேக்
0
தேவையான பொருட்கள்:
மைதாமாவு -300 மில்லி
சோடாஉப்பு - 1/4 தேக்கரண்டி
சீனி - 150
முட்டை - 2
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டைகளை நன்றாக நுரை வரும் அளவுக்கு அடித்து அதில் மைதா மாவு,சீனி, சோடாஉப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு தோசைமாவு பதத்திற்க்கு தயார் செய்யவும்.
பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது நெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைபோல் விரித்து வெந்தபின் மறுபக்கமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
குறைந்த தீயில் வைத்து செய்வது நல்லது.