பாதாம் பருப்பு கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்

மைதா மாவு - 250 கிராம்

சீனி - 250 கிராம்

மாஜரீன் - 250 கிராம்

முட்டை - 4

வெனிலா - ஒரு தேக்கரண்டி

பேக்கிங்பவுடர் - 15 கிராம்

செய்முறை:

பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)

முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.

மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

பின்பு பாதாம் பருப்பு, மாவு, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும். கடைசியாக வெனிலாவையும் சேர்த்து கலக்கவும்.

பின்பு பேக்கிங்தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்புகள்:

சீனி நன்றாக கரைய வேண்டும். சீனி கரையாவிட்டால் கேக் கருகி விடும்.