பாதாம் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - முக்கால் கப் பாதாம் - 2 கைப்பிடி சர்க்கரை - 3/4 - 1 கப் எண்ணெய் + வெண்ணெய் - 1/3 கப் பால் - அரை கப் பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி முட்டை - 2 ஐசிங் சுகர் - சிறிது (விரும்பினால்) வெண்ணிலா எஸன்ஸ் - சில துளி

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு பாதாமை நீரில் ஊற வைத்து

. தோல் நீக்கி சீவி வைக்கவும். மீதமுள்ள பாதாமை பொடியாக்கவும். கால் கப் அளவு பாதாம் பொடி எடுத்து வைக்கவும். முட்டை

வெண்ணெயை குளிர்ச்சி குறைவதற்கு ஃப்ரிட்ஜை விட்டு வெளியே வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேவில் எண்ணெய் தடவிக்கொண்டு அதில் மாவு தூவி வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள கால் கப் பாதாம் பொடியை மைதாவுடன் கலந்து (1/4 + 3/4 கப் மொத்தமாக 1 கப்) அதில் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அதில் பால் சேர்த்து பின்பு எண்ணெய் + வெண்ணெய் கலவை ஊற்றி கலக்கவும்.

இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இத்துடன் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.

கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

பேக்கிங் ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி

அதன் மேல் சீவி வைத்த பாதாமை தூவவும்.

170 - 180 C’ல் 20 - 25 நிமிடம் அல்லது உள்ளே விட்ட டூத் பிக் அல்லது கத்தி சுத்தமாக வெளியே வரும் வரை பேக் செய்து எடுக்கவும்.

விரும்பினால் மேலே ஐசிங் சுகர் தூவலாம். இது எவ்வளவு சாஃப்ட்டாக இருக்கும் என்பதை படத்தை பார்த்தாலே தெரியும். மிகவும் சாஃப்ட் ஸ்பாஞ்சி கேக் கிடைக்கும்.

சுவையான கேக் தயார். மேலே போட்ட பாதாம் க்ரிஸ்பியாகவும். உள்ளே சாஃப்ட் கேக்கும் சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: