பவுண்ட் கேக்
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 180 கிராம் சாக்கோ சிப் - சிறிது கலவை 1: ஷிப்டட் மைதா - 150 கிராம் சர்க்கரை - 100 கிராம் உப்பு - ஒரு கிள்ளு பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி கலவை 2 : முட்டை - 3 வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பால் - 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் உருக்கிக் கொள்ளவும்.
கலவை 1 ல் உள்ள பொருட்களை ஒன்றாக கலக்கிக் கொள்ளவும்.
கலவை 2 ல் உள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
கலவை 1 ல் உள்ள உலர்ந்த பொருட்களுடன் வெண்ணெயை சேர்த்து கட்டியில்லாமல் பேஸ்ட் பதத்தில் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக முட்டை கலவையை சேர்த்து அடித்து
சாக்கோ சிப்ஸ்களை சேர்க்கவும்.
அதை ஒரு லோஃப் (loaf) பேனில் ஊற்றவும்.
350 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட்ட அவனில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
நன்கு பொன்னிறமாக மாறியதும்
வெளியே எடுத்து ஆற விடவும்.
சாக்கோ சிப்ஸ் லேயருடன் மிகவும் மிருதுவான கேக் ரெடி.