பழக்கூழ் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 6

நறுக்கிய மாம்பழம் - ஒரு கப்

துருவிய அன்னாசிப்பழம் - ஒரு கப்

துருவிய கொய்யாப்பழம் - ஒரு கப்

சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி

பைனாப்பிள் எசன்ஸ் - அரை தேக்கரண்டி

சீனி - அரை கப்

சோடியம் பென்சொயேட் - 1 சிட்டிகை

செய்முறை:

பழக்கூழ் செய்யும் முறை:

பலாச்சுளை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அனைத்து பழங்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பழக்கூழ் ஜாம் செய்யும் முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பழக்கூழையும் சீனியையும் சேர்த்து போட்டு கொதிக்க வைக்கவும்.

அதனுடன் சோடியம் பென்சொயேட் சேர்த்து கொதிக்க விட்டு, கலர் தேவையானால் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு துளி உருண்டை, ஜாமை தண்ணீரில் போட்டு, கரையாமல் இருந்தால் ஜாம் பதம் வந்து விட்டது என்பதாகும்.

நன்கு சூடாக இருக்கும் போதே எடுத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு சூடு ஆறிய பிறகு மூடி வைக்கவும்.

குறிப்புகள்: