பனானா புட்டிங்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2 (சிறியது) ப்ரெட் - 2 துண்டுகள் வற்றிய பால் - அரை கப் கன்டண்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி சீனி - 5 மேசைக்கரண்டி + 4 மேசைக்கரண்டி முட்டை - ஒன்று வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
கேக் ட்ரேயில் 4 மேசைக்கரண்டி சீனியைப் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் சீனிப் பாகு காய்ச்சவும். பாகு ப்ரவுன் கலராக வரும் போது வெனிலா எசன்ஸ் சேர்த்து முறுகியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். முறுகிய பாகு (கேரமல்) ட்ரேயில் நன்கு பரவலாக இருக்கும்படி செய்து கொள்ளவும்.
பாத்திரத்தில் ப்ரெட் மற்றும் வாழைப்பழத்தை உதிர்த்துப் போடவும்.
இரண்டையும் நன்றாக பிசைந்துவிட்டு
கன்டண்ஸ்டு மில்க்கைச் சேர்த்துக் கலக்கவும்.
அதனுடன் முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு சீனி மற்றும் வற்றிய பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள கலவையை கேரமல் வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி
15 நிமிடங்கள் நீராவியில் வேகவிட்டு எடுக்கவும்.
ஆறியதும் ஒரு தட்டில் கவிழ்க்கவும்.
டேஸ்டி பனானா புட்டிங் ரெடி. ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.