பனானா சாக்லெட் ப்ரட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3 (அல்லது) 4 ஆல் ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு - 1 1/2 க‌ப் வெண்ணெய் - 1/3 க‌ப் ச‌ர்க்க‌ரை - 3/4 க‌ப் முட்டை - ஒன்று வெனிலா எசன்ஸ் - ‍ ஒரு தேக்க‌ர‌ண்டி பேக்கிங் சோடா - ஒரு தேக்க‌ர‌ண்டி உப்பு - ஒரு சிட்டிகை செமி ஸ்வீட் சாக்லெட் சிப்ஸ் - ‍ 1/2 க‌ப்

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். (குறிப்பு: எப்போதுமே

பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை

வெண்ணெய் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது.)

முத‌லில் மைதா

பேக்கிங் சோடா

உப்பு

சர்க்கரை நான்கையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும். முட்டையை ஒரு சிறிய‌ க‌ப்பில் உடைத்து ஊற்றி அடித்து வைக்க‌வும். வெண்ணெயை உருக்கி வைத்துக் கொள்ள‌வும்.

வாழைப்ப‌ழ‌த்தை தோலை உரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு

முள்க‌ர‌ண்டி அல்ல‌து மேஷ‌ரால் ம‌சித்துக் கொள்ள‌வும். இத‌னுட‌ன் அடித்து வைத்திருக்கும் முட்டைக்க‌ல‌வை

உருக்கிய‌ வெண்ணெய்

வெனிலா எசன்ஸ் போட்டு க‌லந்து கொள்ள‌வும்.

இப்போது

இந்த‌ வாழைப்பழ க‌ல‌வையை மாவு ச‌லித்து வைத்திருக்கும் பாத்திர‌த்தில் போட்டு ஸ்பேட்சுலா அல்லது ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் ரொம்ப‌ அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம்

இல்லையென்றால் ப்ரட்

மென்மைத்த‌ன்மை போய் க‌டின‌மாகிவிட‌ வாய்ப்பு உள்ள‌து.

அடுத்து

சாக்லெட் சிப்ஸை இத‌னுட‌ன் சேர்த்து

ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய 4 X 8 இன்ச் அளவுள்ள‌ பேனில் ஊற்றி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.

ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்த‌தும் ஒரு டூத்பிக்கை உள்ளே விட்டு

அது சுத்தமாக மாவு ஏதும் ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்த்து

ப்ரட் முழுவதுமா வெந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

பிறகு ப்ர‌ட்டை எடுத்து

க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌ விட‌வும்.

சுவையான எளிதாக செய்யக்கூடிய சாக்லேட் பனானா ப்ரெட் ரெடி. பரிமாறும் முன் ஸ்லைஸ் செய்துக் கொள்ளவும். சாக்லெட் கலந்து செய்து இருப்பதால்

இது குழந்தைக‌ளுக்கு மிக‌வும் பிடிக்கும்! நமக்கும் அவ‌ர்க‌ளை ப‌ழ‌ம் சாப்பிட‌ வைத்த‌ திருப்தி கிடைக்கும்!

குறிப்புகள்: