பட்டி ஷூ (பிரெஞ்சு பப்ஸ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயார் செய்த பப்ஸ் மாவு - 300 கிராம்

கோழி (எழும்பு எடுத்தது) - கால் கிலோ

பெரிய வெங்காயம் - பாதி

வெள்ளை மிளகு தூள் - ஒன்றரை தேக்கரண்டி

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

முட்டை - இரண்டு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கறியுடன் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அதனுடன் மிளகுத்தூள், உப்பு, அஜினோமோட்டோ, முட்டை (ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்) இவைகளை எல்லாம் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

தயார் செய்த பப்ஸ் மாவை மெல்லிய சப்பாத்திப் போல் பெரிதாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளரால் தேய்த்த மாவை வட்டமான துண்டுகளாக வெட்டவும்.

ஒரு வட்டத்துண்டின் நடுவே சிறிது இறைச்சிக் கலவையை வைத்து

அதன்மேல் மற்றொரு துண்டினை வைக்கவும்.

ஓரங்களை ஒரு விரலால் அழுத்தி மூடவும். விரல் பதித்த சுற்று வட்டம் பார்ப்பதற்கு பூப் போல் அழகாக இருக்கும். இதேபோல் அனைத்து துண்டங்களையும் செய்து கொள்ளவும்.

பின்னர் இவை அனைத்தையும் ஒரு ட்ரேயில் அடுக்கி

அதனை ஓவனில் வைத்து வேகவிடவும். 220 டிகிரி Fல் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.

இருபது நிமிடத்திற்கு பிறகு ட்ரேயை வெளியே எடுத்து

பூரிப் போல் வெந்துள்ள அனைத்து பப்ஸ் மீதும் எடுத்து வைத்துள்ள முட்டை மஞ்சள் கருவினை தடவவும். பப்ஸின் அனைத்து பாகங்களில் படுமாறு தடவவும்.

ட்ரேயை மீண்டும் அவனில் வைக்கவும். மேலும் 10 நிமிடங்கள் அதே வெப்பநிலையில் வேகவிடவும். பப்ஸ் சிவந்தபின்பு வெளியே எடுத்து சூடாக சாப்பிடவும்.

குறிப்புகள்: