பட்டர் பிஸ்கட்டுகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 200 கிராம்

வெண்ணெய் - 100 கிராம்

பொடித்த சர்க்கரை - 50 கிராம்

உப்பு - கால் தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

பால் - சிறிது (தேவையானால்)

செய்முறை:

பேக்கிங் பவுடர், மைதா மாவு இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாக சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாக மிருதுவாகும் வரை குழைத்துக் கொள்ளவும்.

மைதா மாவை குழைத்த கலவையில் போட்டு மிருதுவான கலவையாக செய்து கொள்ளவும்.

பிறகு மாவினை அப்பளமாக இட்டுக் கொள்ளவும்.

கால் அங்குல பருமன் அளவிற்கு வட்டமான பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.

பிறகு முள் கரண்டி எடுத்து ஒவ்வொரு பிஸ்கட் நடுவிலும் சிறிது மேலாகக் குத்திவிடவும்.

நெய் தடவி மாவு தூவிய தட்டில் பிஸ்கட்டுகளைப் பரவலாக வைக்கவும்.

350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 15 ல் இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்: