பட்டர் பிஸ்கட்
0
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 100 கிராம்
மைதா மாவு - 140 கிராம்
பொடி செய்த சீனி (அ) ஐசிங் சுகர் - 40 கிராம்
முட்டையின் மஞ்சள் கரு - 3
வெனிலா சுகர் பவுடர் (அ) வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
முந்திரி - அலங்கரிக்க
செய்முறை:
வெண்ணெயை உருக்கி
அத்துடன் பொடி செய்த சீனியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெனிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு மைதா மாவைச் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மெல்லியதான ட்ரேயில் எண்ணெய் தடவி
அதில் பிசைந்த மாவைச் சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாகத் தட்டி இடைவெளிவிட்டு வைக்கவும். நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி.
குறிப்புகள்:
டீ, காபியுடன் பரிமாறவும்.