பட்டர் கேக் (ஒரு கிலோ)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 250 கிராம்

பட்டர் - 250 கிராம்

முட்டை - 250 கிராம்( எடை போட்டுக்கொள்ளவும்)

சர்க்கரை - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - ஒன்றேகால் டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - ஒன்றேகால் டீஸ்பூன்

உப்பு - பின்ச்.

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து தனியாக வைத்துக்கொள்ளவும். சர்க்கரையை பொடித்து வைக்கவும்.

ஒரு பெரிய பீட்டிங் பவுளில் பட்டரை பீட் செய்து கொள்ளவும். அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக பீட்(fluffy) செய்யவும்.

முட்டை எடைக்குத்தகுந்தபடி 4 அல்லது 5 இருக்கும், ஒரு பவுளில் ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றி அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கொள்ளவும்.

முட்டையை பட்டர் சர்க்கரை கலவையில் விட்டு நன்றாக பீட் செய்யவும். விருப்பப்பட்டால் பின்ச் உப்பு சேர்க்கவும்.

பின்பு சலித்த மாவை மெதுவாக பட்டர் முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்,சேர்க்கும் போதே மாவை நன்றாக பிரட்டி (fold in one direction)விடவும் .

பேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் போட்டு, எண்ணெய் அல்லது பட்டர் தடவி மாவை தூவி தட்டிக்கொள்ளவும்.

பின்பு மாவுக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, முற்சூடு செய்த அவனில் 170 - 180 டிகிரியில் 35 - 45 நிமிடம் வைத்து, வெந்து விட்டதா என்று ஒரு குச்சியை விட்டு குத்தி பார்த்து,ஒட்டவில்லை என்றால் எடுக்கவும். கேக் நன்றாக ஆறிய பின்பு விருப்பம் போல் கட் செய்து பரிமாறவும்.

சுவையான சாஃப்டான பட்டர் கேக் ரெடி.

குறிப்புகள்:

மாவுக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் விடும் போது நடுவில் கையால் குழிவு ஏற்படுத்திக்கொள்ளவும். கையை தண்ணீரில் நனைத்து தெளித்துவிட்டு கையால் மாவை சமப்படுத்தவும். ஓவனின் சைஸ் தகுந்தபடி குக்கிங் டைம் வேறுபடும். வெந்த கேக் நன்றாக குளிர்ந்த பின்பு கட் பண்ணவும்.