பட்டர் கிறீம் ஐஸிங் (கேக் ஐஸிங்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஐஸிங் சுகர் - 4 கப்

பட்டர் அல்லது வெஜிடபிள் சோர்டினிங்(Shortening) - 1 கப்

தண்ணீர் அல்லது பால் - 2 மேசைக்கரண்டி

எஸன்ஸ் - 1 தேக்கரண்டி (விரும்பிய சுவையில்)

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

ஐஸிங் சுகரை அரிக்கவும் (சலிக்கவும்).

பட்டர், தண்ணீர், எஸன்ஸ், உப்பு சேர்த்து பீட்டரால்(Beater) அடிக்கவும்.

பின்னர் ஐஸிங் சுகரை சிறிது சிறிதாக சேர்த்து கிறீமாகும் வரை அடிக்கவும். (ஒரு கரண்டியால் ஐஸிங்கை எடுத்தால் தொய்ந்து விழாதவாறு இருக்க வேண்டும்).

இது Stiff consistency icing ஆகும்.

மொத்தமாக 3 கப் ஐஸிங் கிடைக்கும்.

ஒவ்வொரு கப் Stiff consistency icing ற்கும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடித்தால் அது Medium consistency icing ஆகும்.

ஒவ்வொரு கப் Stiff consistency icing ற்கும் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடித்தால் அது Thin consistency icing ஆகும்.

தேவையானபடி இந்த ஐஸிங்கை பிரித்து விரும்பிய நிறங்கள் சேர்த்து குழைத்து பயன்படுத்தலாம்.

குறிப்புகள்:

Stiff consistency icing கூட சில வேளைகளில் ஐசிங் பாக்கில்(Bag) வைத்து போடும்போது கைச்சூட்டில் இளகி விடும் அப்போது மேலு சிறிது அரித்த ஐஸிங் சுகர் சேர்த்து குழைக்கலாம். இந்த பட்டர் கிறீம் ஐஸிங்கை ஸ்டபிலைஸ்(Stabilize) பண்ணுவதற்கு இதனுடன் 1 மேசைக்கரண்டி Meringue Powder சேர்க்கலாம்(மேற்கூறிய அளவுகளிற்கு). முட்டை சாப்பிடாதவர்கள் இதை சேர்க்க வேண்டாம். ஏனெனில் இது முட்டையில் செய்யப்பட்டது.