பங்களூர் தக்காளி சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி - கால் கிலோ

பச்சைமிளகாய் - 8

மிளகாய் வற்றல் - 7

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 50 கிராம்

கடுகு - ஒரு தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

வெல்லம் - 2 தேக்கரண்டி

செய்முறை:

தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், உப்பு நான்கையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு தாளித்து பின் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து விடாமல் கிளறவும்.

தணல் மிதமாக இருந்தால் போதுமானது. தக்காளி விழுதிலிருந்து எண்ணெய் பிரிந்து தளதளவென்று வாணலியில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

குறிப்புகள்: