நெல்லிக்காய் ஜாம்
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்ச்சதை (விதைகளை நீக்கி) - 250 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
சீனி - - 250 கிராம்
கிராம்பு - 3
வெனிலா - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காயைச்சதை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
நெல்லிக்காய் நன்கு வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சதையை நன்றாக மசிக்கவும்.
மசித்த நெல்லிகாயில் சீனி போட்டு கொதிக்கவிட்டு, நெல்லிக்காயை நன்கு மசித்துக் கொண்டே இருக்கவும்.
இதை 2 அல்லது 3 மணி நேரங்கள் ஒரளவு சூட்டில் வைத்திருக்கவும்.
சீனி முழுவதும் நன்கு கரைந்து பாகு பொங்கி கொதித்து ஒரளவாகத் தடிக்க தொடங்கி நன்கு சிவந்த கலர் வந்ததும் இறக்கிஆற வைக்கவும்.
ஜாம் நன்றாக ஆறிய பின்பு வெனிலா, கிராம்பு கலந்து தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி விடவும். பின்பு போத்தலை மூடி வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்-(1)ஜாம் நன்றாக ஆறிய பின்பு வெனிலா, கிராம்பு கலந்து தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி விடவும். (2)சீனி முழுவதும் நன்கு கரைந்து பாகு பொங்கி கொதித்து ஒரளவாகத் தடிக்க தொடங்கி நன்கு சிவந்த கலர் வந்ததும் இறக்கிஆற வைக்கவும். (3)ஒரளவு பிஞ்சு நெல்லிக்காயில் செய்த ஜாம் நன்கு சிவந்த
நிறமாகவும், முற்றிய நெல்லிக்காயில் செய்த ஜாம் செம்பச்சை நிறமாகவும் காணப்படும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.