நெல்லிக்காய் அல்வா
0
தேவையான பொருட்கள்:
1. நெல்லிகாய் (துருவியது) - 1 கப்
2. சர்க்கரை - 1 கப் - 1 1/4 கப்
3. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பெரிய நெல்லிகாயை விதை நீக்கி துருவி வைக்கவும்.
சர்க்கரை மூழ்கும் அளவுக்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் (2 மேஜைக்கரண்டி) விட்டு, ஏலக்காய் தூள் போட்டு சர்க்கரை கரைய விடவும்.
இதில் துருவிய நெல்லிகாய் சேர்த்து கிளரவும்.
அல்வா பதம் வந்ததும் எடுத்து ஆரியதும் பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
குறிப்புகள்:
விரும்பினால் ஒரு துண்டு பட்டை கூட சேர்க்கலாம். இதை ப்ரட்'கு ஜாம் போல் உபயோகிக்கலாம். தினமும் இதை கொஞ்சம் உணவில் சேர்த்தால் உடம்புக்கு நல்லது. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.