நெய் பிஸ்கட்





தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
சர்க்கரை பவுடர் - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/2 கப்
செய்முறை:
மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து சலிக்கவும்.
இதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்.
இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்.
இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போது பிஸ்கட்களின் மேல் நெய் தடவினால் பளபளப்பாக இருக்கும்.