நியூட்டெல்லா கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 250 கி்ராம் மார்ஜரின் (Margarine) - 250 கி்ராம் சர்க்கரை - 250 கி்ராம் முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி நியூட்டெல்லா (Nutella) - 4 மேசைக்கரண்டி பால் - அரை கப்

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.

முதலில் மார்ஜரினுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையைத் தனியாக அடித்து

மார்ஜரினுடன் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.

அதனுடன் நியூட்டெல்லாவைச் சேர்த்து அடிக்கவும்.

பிறகு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து

மரக்கரண்டியால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

மைக்ரோவேவ் பவுலில் பட்டர் தடவி

சிறிது மாவு தூவி கல்ந்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.

பிறகு பவுலை மைக்ரோவேவில் வைத்து ஹையில் 20 / 25 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டுப் பார்த்து

ஒட்டாமல் வரும் போது எடுத்து

ஒரு தட்டில் மாற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.

டேஸ்டி நியூட்டெல்லா கேக் ரெடி. விரும்பினால் அதன் மீது நியூட்டெல்லா தடவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: