நானஹத்தா
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கப்
கரூர் நெய் - 100 கிராம்
சீனி - முக்கால் கப்
சமையல் சோடா - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
சீனியை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், சீனி, சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைய பிசைய உளுந்து மாவு போல் இருக்கும்.
அதில் மைதா மாவை சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.
மாவை அடித்து பிசையாமல் தேய்த்து பிசையவும்.
மாவை கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும். சிறு அச்சுகளால் தட்டிய மாவை விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
நெய் தடவிய பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள நானஹத்தாவை சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். குக்கர் தட்டை குக்கரில் வைத்து அதன் மேல் நானஹத்தா வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும். கேஸ்கட்
வெயிட் போடாமல் குக்கரை மூடி சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும். இடையில் வேண்டுமானால் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.
நானஹத்தா வெள்ளையாக இருக்க வேண்டும். மேலே லேசாக வெடிப்புகள் இருக்கும் சிறிய தோசை திருப்பியால் மெதுவாக எடுக்கவும்.