நாகூர் உரட்டி
0
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - அரை கிலோ
தேங்காய் பால் - ஒரு கப் (கால் மூடி)
எண்ணெய் - 5 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
சீனி - 5 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாவில் பால், முட்டை, சீனி, உப்பு, நெய் சேர்த்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்து அரை இன்ச் அளவிற்கு வட்டமாக தட்டியெடுத்து தவாவில் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அவற்றை திருப்பி போட்டு எண்ணெய் விட்டு திரும்பவும் இரண்டு நிமிடம் வைத்து வேக விடவும்.
இரு புறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான நாகூர் உரட்டி ரெடி. விரும்பினால் சீனியை பாகு காய்ச்சி மேலே தடவலாம்.