தோசைக்கல் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - கால் கிலோ

சர்க்கரை - 200 கிராம்

நெய் - 200 கிராம்

முட்டை - 5

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

காய்ந்த திராட்சை - 50 கிராம்

எண்ணெய் - 200 மி.லி.

செய்முறை:

இது ஓவன் பயன்படுத்தாமல், தோசைக்கல்லிலேயே செய்யப்படும் கேக்.

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். முந்திரி பருப்பை சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டையை நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். அதிலேயே மைதா, நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து ஒரு மத்தினைக் கொண்டு நன்றாக கடையவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை செவ்வக வடிவில் அதில் ஊற்றவும்.

அதன்மேல் நறுக்கிய முந்திரி, திராட்சையை சிறிது தூவவும். வெந்தவுடன் திருப்பிப் போட்டு மீண்டும் அதன்மேல் அதே வடிவில் மாவினை ஊற்றவும். முந்திரி, திராட்சையை தூவவும்.

வெந்தவுடன் மீண்டும் திருப்பிப் போட்டு வேகவிடவும். மாவினை மேலும் மேலும் இருபுறமும் ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவைத்து இரண்டு அல்லது மூன்று அங்குல உயரம் வந்ததும் இறக்கி, ஆறவைத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்: