தேங்காய் பிஸ்கட் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 100 கிராம்

துருவிய தேங்காய் - 50 கிராம்

ஜீனி - 100 கிராம்

வெண்ணெய் - 75 கிராம்

தேன் - ஒரு தேக்கரண்டி

எலும்மிச்சைசாறு - 2 தேக்கரண்டி

செய்முறை:

மைதாவினை நன்கு சலித்துக் கொள்ளவும். ஜீனியை நன்கு பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய்ச் சேர்த்து நன்கு பிசையவும்.

தேவையெனில் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

மாவினை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து ஒரு தட்டில் விடவும்.

பிறகு தட்டினை ஓவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 12 முதல் 15 நிமிடங்கள் வரை சூடு செய்து எடுக்கவும்.

குறிப்புகள்: