தேங்காய் பிஸ்கட்டுகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொப்பரை தேங்காய் - 120 கிராம்

முட்டை வெள்ளை கரு - 2 முட்டையில் எடுத்தது

பொடித்த சர்க்கரை - 60 கிராம்

செய்முறை:

பொடித்த சர்க்கரையையும் தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாய் கலந்து கொள்ளவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தனியே எடுத்து முள்கரண்டியால் நன்றாக கெட்டியாக அடித்துக் கொள்ளவும்.

சர்க்கரை, தேங்காய் கலந்த கலவையை அடித்த முட்டை வெள்ளை கருவில் போட்டு கலக்கவும்.

சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.

நெய் தடவி, மாவு தூவிய தட்டில் கோபுரம்போல் வைக்கவும்(ஒவ்வொரு உருண்டையும் ஒவ்வொரு கோபுரம்).

250 டிகிரி F சூட்டில் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்: