தேங்காய் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப் தேங்காய் துருவல் - 1 1/2 கப் சர்க்கரை - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பட்டர் - ஒரு கப் பால் - ஒரு கப் முட்டை - 3 உப்பு - ஒரு சிட்டிகை வென்னிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மைதாவை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு

உப்பு

சர்க்கரை

பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

கலந்து வைத்திருக்கும் மாவுடன் வெண்ணெயை சேர்த்து கலந்து வைக்கவும்.

முட்டையை அடித்து

அதில் பால்

வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இறுதியில் தேங்காய் துருவலையும் இந்த மாவு கலவையில் சேர்க்கவும்.

பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 F முற்சூடு செய்த அவனில் 30 - 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

சாஃப்டான சுவையான தேங்காய் கேக் தயார். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.

குறிப்புகள்: