துனிசியா ஆம்லெட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் சாஸேஜ் (அ) வேகவைத்த கோழி - சிறிது வெங்காயம் - 2 உருளைக்கிழங்கு - 3 குடைமிளகாய் - பாதி பச்சை மிளகாய் - 2 முட்டை - 4 மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி துருவிய சீஸ் - ஒரு கப் பார்ஸ்லே கீரை (அ) கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு காய்ந்த ப்ரெட் (அ) ப்ரெட் க்ரெம்ஸ் - அரை கப் பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்

உருளைக்கிழங்கு

குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை தனித்தனியாக அரை பதமாக வதக்கிக் வைக்கவும்.

காய்ந்த ப்ரெட்டை பொடி செய்து கொள்ளவும்.

வதக்கிய காய்கறிகளுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்க்கவும்.

அத்துடன் சிக்கன் சாஸேஜை சேர்க்கவும்.

பிறகு துருவிய பார்ஸ்லே கீரை மற்றும் துருவிய சீஸ் சேர்த்து

முட்டையை உடைத்து ஊற்றி பேக்கிங் பவுடர் மற்றும் ப்ரெட் தூள் சேர்த்து அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும்.

கேக் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி

முட்டை கலவையை ஊற்றி 180 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

சுவையான துனிசியா ஆம்லெட் கேக் தயார். துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: