திராமிஸு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

லேடீஸ் ஃபிங்கர் குக்கீஸ் - ஒரு பாக்கெட் மெஸ்கர்போனி சீஸ் - 250 கிராம் விப் கிரீம் - 250 கிராம் செமி ஸ்வீட் சாக்லேட் - ஒரு துண்டு பவுடர்டு சுகர் - சுவைக்கு ஏற்ப இன்ஸ்டண்ட் காபி பொடி - 2 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி கோகோ பவுடர் - தேவைக்கு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

அவனில் நீரை கொதிக்க வைத்து காபி பொடியை நன்கு கலந்துக் கொள்ளவும்.

சாக்லேட்டை துருவிக் கொள்ளவும்

குக்கீஸை காபி கலந்த நீரில் நன்கு முக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் அதை அடுக்கி வைக்கவும். ஓரங்கள் மற்றும் ஆங்காங்கே துருவிய சாக்லேட்டை தூவி விடவும்.

ரூம் டெம்பரேச்சரில் வைத்த சீஸில் சர்க்கரை கலந்து அடிக்கவும்.

பின் அதில் விப் க்ரீமை கலந்து நன்கு பேஸ்ட் பதத்தில் கலக்கவும். வெனிலா எசன்ஸை சேர்க்கவும்.

குக்கீஸ் அடுக்கிய பாத்திரத்தில் ஒரு லேயர் போட தேவையான கலவையை அப்ளை செய்யவும். பாதி கலவையை தனியே வைக்கவும்.

பின் மீண்டும் ஒரு குக்கீஸ் லேயர் போடவும்.

சாக்லேட் தூவி பாதி எடுத்து வைத்த கலவையை போடவும்.

பின் கோகோ பவுடரை கொண்டு டஸ்ட் செய்து தேவை எனில் சாக்லேட் சிரப்பை ஆங்காங்கே ஊற்றவும்

அப்படியே மூடி வைத்து குளிர்சாதன பெட்டியில் ஒரு நாள் வைக்கவும்.

அடுத்த நாள் நன்கு செட் ஆகி இருக்கும்.

சிறிது கட் செய்தால் உடையாமல் கேக் போல வர வேண்டும். குக்கீஸ் நன்கு ஊறி இருக்கும்.

மிகவும் சுவையான யம்மி திராமிஸு (Tiramisu) தயார்

குறிப்புகள்: