திராட்சைக் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உலர்ந்ததிராட்சை - 250 கிராம்

மைதா - 500 கிராம்

சீனி - 500 கிராம்

மாஜரீன் - 500 கிராம்

முட்டை - 10

பேக்கிங் பவுடர் - 1 பாக்கெட்

துருவிய சாக்லேட் - 250 கிராம்

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை:

மைதாவையும் பேக்கிங்பவுடரையும் சேர்த்து 4-5 முறை சலித்து வைக்கவும்.

திராட்சையை மைதாக் கலவையுடன் கலந்து வைக்கவும்.

முட்டையை உடைத்து மஞ்சள்கரு ஒரு பாத்திரத்திலும் வெள்ளைக்கரு ஒரு பாத்திரத்திலும் எடுத்து வைக்கவும்.

மாஜரீனையும், சீனியையும் சேர்த்து க்ரீமாகும் வரை நன்றாக அடிக்கவும்.

அக்கலவையுடன் மஞ்சள்கருவைச் சேர்த்து அடிக்கவும்.

வெள்ளைக்கருவை நுரை பொங்க அடிக்கவும்.

மாஜரீன் கலவைக்குள் வெள்ளைக்கருவை சேர்த்து அடிக்கவும்.

பின்பு வெனிலா எசன்ஸ், மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மரத்தடியால் கலக்கவும்.

ஓவனை முற்கூட்டியே சூடுப்படுத்தவும்.

கேக் ரேட்யில் பேக்கிங் பேப்பரை விரித்து இக்கலவையை ஊற்றவும்.

175° டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்யவும்.

பின்பு வெளியில் எடுத்து ஆறிய பின்பு கேக்கை திருப்பி ஒரு தட்டில் போடவும்.

அதன் மேல் மாஜரீனைப் பூசி துருவிய சாக்லேட்டை தூவி, வெட்டிப் பரிமாறவும்.

குறிப்புகள்:

மைதாவை சேர்க்கும் போது அடிக்கக் கூடாது. கரண்டியால் கலக்க வேண்டும்.