தித்திக்கும் தேன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 100 கிராம் தேன் - 60 மிலி முட்டை – 5 கேஸ்டர் சுகர் – 150 கிராம் பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.

அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை(சுமார் 10 நிமிடங்கள்) அடிக்கவும்.

பிறகு எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும்

பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.

ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பேக்கிங் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் /ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.

பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

தித்திக்கும் தேன் கேக் தயார். இதில் தேனின் சுவை தூக்கலாக தெரியும். தேன் சுவை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

குறிப்புகள்: