தன்டி ஆலுவி போகிபா (Dhandi Aluvi Boakiba)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மரவள்ளிக்கிழங்கு துருவியது - 3 கப்

2. சர்க்கரை - 3 கப்

3. இளம் தேங்காய் (gabulhi) துருவியது - 3 1/2 கப்

4. வெண்ணெய் - 10 கிராம்

5. ஜாஸ்மின் / ரோஸ் வாட்டர் - சிறிது (3 - 4 மேஜைக்கரண்டி) [விரும்பினால்]

செய்முறை:

வெண்ணெயை ஒரு அவன் பாத்திரத்தில் தடவி வைக்கவும். அவனை 160 C’ல் முற்சூடு செய்யவும்.

மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

இந்த கலவையை பாத்திரத்தில் பரப்பி அவனில் 30 - 40 நிமிடம் பேக் செய்யவும்.

சுவையான தன்டி ஆலுவி போகிபா தயார்.

குறிப்புகள்:

இது மாலத்தீவில் பிரபலமான கேக் வகை. காபுலி என்பது இங்கே இனிப்புக்கு பயன்படுத்தும் தேங்காய். நாம் சட்னி அரைக்க பயன்படுத்திவதற்கும், இளநீரில் உள்ள தேங்காய்க்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள தேங்காய். தண்டி ஆலுவி என்றால் மரவள்ளிக்கிழங்கு / குச்சிக்கிழங்கு. இதில் விரும்பினால் தேங்காய் துருவலை 3 கப்பாக்கி ஒரு முட்டையை அடித்து கலந்து, 1 மேஜைக்கரண்டி மைதாவும் சேர்க்கலாம். முட்டை இல்லாமல் மைதா மட்டுமே கூட சேர்க்கலாம்.