தன்டி ஆலுவி போகிபா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய மரவள்ளிக்கிழங்கு - 3 கப் சர்க்கரை - 3 கப் துருவிய இளம் தேங்காய் (Gabulhi) - 3 1/2 கப் வெண்ணெய் - 10 கிராம் ஜாஸ்மின் / ரோஸ் வாட்டர் - 3 - 4 மேசைக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:

காபுலி என்பது இங்கே இனிப்புக்கு பயன்படுத்தும் தேங்காய். நாம் சட்னிக்கு பயன்படுத்துவதற்கும்

இளநீருடன் உள்ள தேங்காய்க்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள தேங்காய். அதை துருவி வைக்கவும்.

மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி துருவி வைக்கவும். அவன் பாத்திரத்தில் வெண்ணெயை தடவி வைக்கவும். அவனை 160 C’ல் முற்சூடு செய்யவும்.

தேங்காய் துருவல் மற்றும் கிழங்கு துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பின் சர்க்கரை சேர்த்து நீர் இல்லாமல் அரைக்கவும்.

கடைசியாக ஜாஸ்மின் வாட்டர் / ரோஸ் வாட்டர் / ரோஸ் எஸன்ஸ் சேர்த்து அரைத்து வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி பேக் செய்யவும்.

பேக் ஆக எப்படியும் 30 - 50 நிமிடம் வரை ஆகும். ஓரங்கள் சிவந்தும் உள்ளே வெந்து ஒட்டாமலும் வரும் போது எடுக்கலாம். இது மற்ற கேக் வகை போல் உப்பலாக வராது. சற்று ஈரப்பதமுடன் மொழுமொழுவென இருக்கும். ஆனால்

சுவையும் ரோஸ் வாட்டர் வாசமும் சூப்பராக இருக்கும்.

குறிப்புகள்: