தக்காளி கெட்சப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம் - 1கி

பெரிய வெங்காயம் - 2

ஒயிட் குக்கிங் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்

லவங்கம் - 2

வால்மிளகு - 2

மிளகு - 2

ஜீனி - 2 ஸ்பூன்

மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்

உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

வினிகரில் லவங்கம், வால்மிளகு, மிளகு இவற்றை பொடி செய்து சேர்த்து கொதிக்கவிடவும்.

தக்காளியை வேக வைத்து தோல் நீக்கவும்.

தோல் நீக்கிய தக்காளி, வெங்காயத்தை நன்கு அரைத்து வடிகட்டவும்.

தக்காளி சாறுடன் வினிகர் கலவை, ஜீனி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

பாதி அளவு கொதித்து வற்றியதும் ஆறவைத்து சுத்தமான காய்ந்த பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்:

ரொட்டி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.