தக்காளிப்பழ ஜாம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 750 கிராம்

சீனி - 100 கிராம்

தேசிக்காய்ப்புளி - 4 துளி

செய்முறை:

தக்காளிப்பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதித்த நீரை அதன் மேல் ஊற்றி 5 நிமிடங்கள் மூடிவிடவும்.

பின்பு அதை எடுத்து தோலை நீக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் தக்காளியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் போடவும். அதனுள் சீனியையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பின்பு அடுப்பில் வைத்து அடிப்பிடிகாதபடி தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

கரண்டியால் அக்கலவையை எடுத்து விடும் போது கட்டியாக விழ வேண்டும். அது தான் பதம்.அப்படி வந்ததும் இறக்கவும்.

நன்றாக ஆறிய பின்பு 4 துளி எலுமிச்சம்பழப்புளி சேர்க்கவும்.

பின்பு போத்தலில் அடைத்து குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.

குறிப்புகள்:

இந்த ஜாமினைப் பயன்படுத்தும் போது உலர்ந்த கரண்டி அல்லது உலர்ந்த கத்தியினைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் கெடாமால் இருக்கும். சில நாடுகளில் ஜாம் செய்வதற்குரிய சீனி உள்ளது. அதை வாங்கிப் பயன்படுத்தினால் 15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.