டேட்ஸ் மஃபின்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் டேட்ஸ் - 10 கெட்டியான ஃப்ரெஷ் தயிர் - அரை கப் வெண்ணெய் - 20 கிராம் பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் பால் - 2 மேசைக்கரண்டி முட்டை - ஒன்று வெண்ணிலா எஸன்ஸ் - சிறிது

செய்முறை:

தேவையான அனைத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைக்கவும். ரூம் டெம்பரேச்சரில் இருப்பது அவசியம். அவனை 180C’ல் முற்சூடு செய்யவும்.

மாவுடன் பேகிங் பவுடர்

பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.

டேட்ஸை சிறிது நேரம் ஊற வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

முதலில் முட்டையை தனியாக அடித்துக் கொள்ளவும். இதனுடன் தயிரை சேர்த்து கலக்கவும்.

தயிர் நன்றாக கலந்ததும் வெண்ணெய்

எஸன்ஸ்

பால் சேர்த்து கலக்கவும். பின் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கெட்டி இல்லாமல் கலக்கவும். அதிகம் அடித்து கலக்க வேண்டாம்.

கடைசியாக டேட்ஸ் சேர்த்து கலந்து விடவும்.

இதை மஃபின் மோல்டுகளில் முக்கால் பாகம் நிரப்பி அவனில் வைக்கவும்.

உள்ளே விட்ட டூத் பிக் (அ) கத்தி சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும். 10 - 20 நிமிடத்தில் தயாராகி விடும்.

சுவையான

மென்மையான டேட்ஸ் மஃபின் (Dates Muffins) தயார். இந்த அளவில் 6 பெரிய மஃபின்கள் கிடைக்கும்.

குறிப்புகள்: