டின்னர் ரோல்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 500 கிராம்
ஈஸ்ட் - 10 கிராம்
சர்க்கரை - 6 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
வெதுவெதுப்பான பால் - 100 மில்லி
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சர்க்கரையையும், ஈஸ்டையும் போட்டு நன்கு கலக்கவும்.
அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, கிண்ணத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் அரை மணிநேரம் வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து பார்த்தால் ஈஸ்ட் நுரைத்து கொண்டு இருக்கும்.
மைதா மாவு, உப்பு இரண்டையும் சலித்து ஒரு தட்டிலோ அல்லது ஒரு மேசையின் மேலோ போட்டு, நடுவில் பள்ளம் செய்து சர்க்கரை, புளித்த ஈஸ்ட் சேர்க்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை அழுத்திப் பிசைந்து மிருதுவான கலவையாகச் செய்து கொள்ளவும்.
கலவை சற்று தளர்த்தியாக இருக்க வேண்டும். அக்கலவையை நன்றாக அடித்துப் பிசைய வேண்டும்.
அந்த மாவை முக்கால் மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.
பிறகு திறந்து பார்த்தால் அது இருமடங்கு ஆகியிருக்கும். சிறிதளவு வெண்ணெயை தடவி நன்றாக பிசையவும்.
பிறகு மாவை பல வடிவங்களாக செய்து வைக்கவும்.
நெய் தடவிய தட்டில் இரு அங்குல இடைவெளி விட்டு அந்த டின்னர் ரோல்களை வைக்கவும்.
பேக் செய்யும் முன் அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து 425 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
பேக் ஆனவுடன் எடுத்து அதன் மேல் வெண்ணெயை ப்ரஷ்ஷினால் தடவி விடவும். அது பார்க்க பளபளப்பாக இருக்கும்.