செவன் கப் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - ஒரு கப்

பால் - ஒரு கப்

நெய் - ஒரு கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

சர்க்கரை - மூன்று கப்

ஏலப்பொடி - சிறிது

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது சூடேறியவுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வாணலியில் கொட்டவும்.

சீரான சூட்டில் வாணலியில் உள்ள கலவையை ஒரு கரண்டி கொண்டு நன்றாக கலக்கவும்.

கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் ஒரு தட்டில் கொட்டி சதுரம் அல்லது செவ்வக வடிவ பெரிய கேக் போன்று செய்துகொள்ளவும்.

இதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம் துண்டுகளைப் போடலாம்.

பிறகு சிறிய கேக் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்: