செர்ரி பிஸ்கட்டுகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 60 கிராம்

செர்ரி பழம் - 30 கிராம்

மைதா மாவு - 120 கிராம்

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

பொடித்த சர்க்கரை - 40 கிராம்

செய்முறை:

மாவையும் பேக்கிங் பவுடரையும் சலிக்கவும்.

செர்ரி பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மாவையும் வெண்ணெயையும் ஒன்று சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்கவும்.

பொடித்த சர்க்கரையையும், செர்ரி துண்டுகளையும் சேர்க்கவும்.

சிறிது குளிர்ந்த தண்ணீர் கலந்து பூரி மாவு போல பிசையவும்.

அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் கட்டரினால் வெட்டவும்.

முள்கரண்டியால் நடுவில் மேலாக சிறிது குத்தவும்.

நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைத்து 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்: