செர்ரி கேக் (1)
0
தேவையான பொருட்கள்:
மைதா - 4 1/2 கப்
சீனி - 2 1/2கப்
வெண்ணெய் - 1 1/2 கப்
முட்டை - 4
பிளம்ஸ்- 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 3 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
செர்ரிஸ் - 300 கிராம்
செய்முறை:
சீனியை பொடித்து வைத்துகொள்ளவும்
பொடித்த சீனியையும்,வெண்ணெயையும் நன்கு நுரை பொங்கும்படி கலக்கவும்.
மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை சலித்துதனியே வைக்கவும்.
முட்டை மஞ்சள்,வெள்ளைக்கருவைத் தனியே பிரித்து விடவும்.
வெள்ளை கருவை நுரை பொங்க அடிக்கவும்.
மாவு,முட்டை வெள்ளைக்கரு இவற்றை மெதுவாக சீனி,வெண்ணெய் கலவையில் சேர்க்கவும்.
இறுதியில் செர்ரி, ப்ளம்ஸ்,எசன்ஸ் கலந்து,நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி 350 டிகிரிபாரங்கீட்டில் வேகவிடவும்.