செர்ரி கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - 150 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
பட்டர் அல்லது மார்ஜரீன்- 100 கிராம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
செர்ரி - 75- 100 கிராம்
எலுமிச்சை தோல் - சிறிது
சால்ட் - பின்ச்
செய்முறை:
முதலில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து தனியே வைக்கவும். எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கவும். சர்க்கரையை பொடி செய்யவும். செர்ரியை கட் செய்து வைக்கவும். கட் செய்த செர்ரியை சிறிது சலித்த மாவில் பிரட்டி வைக்கவும்.
ஒரு பவுலில் பட்டரை பீட் செய்யவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, எலுமிச்சைதோல், பின்ச் சால்ட் சேர்த்து திரும்ப பீட் செய்யவும். முட்டை இரண்டை தனியாக அடித்து வைக்கவும். அதனையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். பீட் செய்யவும்.
பின்பு சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் பிரட்டவும்(fold), மாவும், பட்டர், சர்க்கரை, முட்டை கலவை ஒன்று சேரும் படி ஒரே பக்கமாக பிரட்டவும். பின்பு மாவில் தோய்த்த செர்ரியை சேர்க்கவும்.
ப்ரவுன் அல்லது பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி சிறிது மாவு தூவி (கோட்) செய்து பேக்கிங் ட்ரேயில் ரெடி செய்த மாவை விட்டு சமப்படுத்தவும். நடுவில் சிறிது குழித்து கொள்ளவும்.
முற்சூடு செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் 45 நிமிடம்-1 மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.
ஆறவைத்து கட் செய்து பரிமாறவும். சுவையான செர்ரி கேக் ரெடி.