சுக்கு லேகியம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுக்குப்பொடி, மிளகு, சீரகம், ஓமம், கண்டத்திப்பிலி - ஒவ்வொன்றும் ஒரு கரண்டி

கசகசா - 1/2 கரண்டி

விரலி மஞ்சள் - 1 துண்டு

ஏலக்காய் - 5

கிராம்பு - 5

வெல்லம் - 1 கப்

நெய் - 1/4 கப்

நல்லெண்ணெய் - 1/4 கப்

பாதாம் பருப்பு - 10

செய்முறை:

ஏலக்காய், பாதாம், கிராம்பு தவிர மற்றவற்றைப் பொடித்துக் கொள்ளவும்.

இந்தப்பொடியுடன் பாதாம், ஏலக்காய், கிராம்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பிசிறி வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்ததும் மண் போக வடிகட்டி, அரைத்த பொடி, நல்லெண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.

நன்கு சேர்ந்து வரும்போது நெய் விட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.

குறிப்புகள்: