சிம்பிள் யூல் லாக் கேக் டெகரேஷன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாக்லெட் ஸ்விஸ் ரோல் (அ) ப்ளெய்ன் ஸ்விஸ் ரோல் - ஒன்று சாக்லெட் ஐஸிங் - சாக்லெட் ஸ்விஸ் ரோல் குறிப்பில் கொடுத்து இருப்பது போல் 2 மடங்கு ஹொலி இலைகள் & பழங்கள் பாலட் நைஃப் டூத் பிக் இடுக்கி பேப்பர் டவல் உயரமான

நீண்ட சமையலறைப் பாத்திரம் - ஒன்று (சாக்லெட் ஸ்விஸ் ரோல்

ப்ளெய்ன் ஸ்விஸ் ரோல் மற்றும் ஹொலி இலைகள் & பழங்களுக்கான லிங்க் கீழே குறிப்பில் உள்ளது.)

செய்முறை:

கேக் போர்ட்டைத் தயாராக வைக்கவும். ஹொலி இலைகள்

பழங்களை முன்னதாகவே தயார் செய்து வைக்கவும். சாக்லெட் ஐஸிங்கைக் குழைத்து வைக்கவும். எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தைக் கவிழ்த்துப் போட்டு

அதன் மேல் ஃபில்லிங் பூசி உருட்டிய ரோலை வைக்கவும். ரோலின் இரண்டு ஓரங்களிலும் சாக்லெட் ஐஸிங் பூசவும்.

அதன் மேல் டூத் பிக் கொண்டு வட்டமாகக் கோடுகள் வரையவும்.

ரோலின் மீதிப் பகுதியிலும் ஐஸிங் பூசவும்.

அதனை மெதுவே கேக் போர்டுக்கு மாற்றி

டூத் பிக் கொண்டு மரப்பட்டை அமைப்பில் நீளமாகவும் வட்டமாகவும் கோடுகள் வரையவும்.

கிச்சன் டவலை நனைத்துப் பிழிந்து கேக்கைச் சுற்றிலும் போர்டைச் சுத்தம் செய்யவும். பாலட் நைஃப் தகட்டைச் சுற்றிப் பிடித்துக் கொண்டால் ஐஸிங்கில் பட்டுவிடாமல் சுலபமாகச் சுத்தம் செய்யலாம்.

ஏற்கனவே செய்து தயாராக வைத்துள்ள ஹொலி இலைகளையும் பழங்களையும் இடுக்கியால் எடுத்து ஆங்காங்கே வைத்து அலங்கரித்தால் க்றிஸ்மஸுக்கான அழகான யூல் லாக் (Yule Log) தயார். ஐஸிங் கேக்குகளிலேயே சுலபமான அலங்காரம் இதுதான். சிலும்பாமல் சீராகப் பரவ வேண்டும் என்னும் அவசியம் இல்லை. எந்த இடத்திலும் சரியாக வரவில்லையே என்று தோன்றாது. சாக்லேட் ஐஸிங் கூட சீராகக் கலக்காமல் அங்கங்கே விடுபட்டிருந்தால் மரப்பட்டை போலவே தான் தெரியும்.

குறிப்புகள்: